Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைக்கான முகம் இல்லை என நிராகரித்தார்கள்… ஆரம்பகால போராட்டங்கள் பற்றி பேசிய ராஷ்மிகா!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:18 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, குபேரா மற்றும் தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணல் ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் சந்தித்த போராட்டங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “ஆரம்பத்தில் எனக்கு நடிகைக்கான முகம் இல்லை என சொல்லி நிராகரித்தார்கள். 25 படங்களுக்கு மேல் ஆடிஷன் சென்று நிராகரிக்கப்பட்டுள்ளேன். அப்போதெல்லாம் அழுதுகொண்டே வீட்டுக்கு வருவேன். அதன் பின்னர்தான் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments