காஞ்சனா நான்காம் பாகத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா!

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (15:10 IST)
தனது திரை பயணத்தை டான்ஸ் மாஸ்டராக துவங்கி, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார்.

இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இடையில் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். சமீபத்தில் பொள்ளாச்சியில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்றது.

ஏற்கனவே இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவும் படத்தில் இணைந்துள்ளார். வழக்கமாக காஞ்சனா வரிசை படங்களில் பேய் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெறும். இந்நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா பேயாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments