Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் நான் பேன் இந்தியா நடிகை என சொல்லிக் கொள்ளலாம்… ராஷி கண்ணா பெருமிதம்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (08:00 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்டைலிஷான உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பார்சி தொடர் மூலமாக இந்தியா முழுவதும் தான் அறியபட்டுள்ளதாகவும், அதனால் இனிமேல் தன்னை இந்திய நடிகை என சொல்லிக்கொள்ளலாம் எனவும் ராஷி கண்ணா பெருமிதப்பட்டுள்ளார். மேலும் அவர் “இந்த தொடரை நான் ராஜ் & டிகே பெயரைக் கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டேன்” எனவும் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த ராஷி கண்ணா, இப்போது அங்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments