Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள இயக்குனர் இயக்கத்தில் சக்திமானாக ரண்வீர் சிங்? – சமூகவலைதளத்தில் பரவும் தகவல்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (14:00 IST)
இந்தியாவில் 1990கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. இந்நிலையில் இப்போது படத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நடிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. மேலும் அந்த படத்தை மலையாளத்தில் மின்னல் முரளி என்ற ஹிட் படத்தை இயக்கிய பாசில் ஜோசப் இயக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments