Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன்

முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன்
, வியாழன், 20 நவம்பர் 2014 (19:02 IST)
முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ரங்கூன் படம் இன்று தொடங்கியது.

முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தை தயாரித்து வருகிறார்கள். இதனையடுத்து அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு ரங்கூன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

 
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். கடல் படத்துக்குப் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை,  இந்திரஜித் ஆகிய படங்களில் கௌதம் கார்த்திக் நடித்தார். அதில் என்னமோ ஏதோ மட்டும் வெளியாகி தோல்வி அடைந்தது. இந்நிலையில் புதிதாக ரங்கூன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இன்று ரங்கூனின் படப்பிடிப்பு தொடங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil