Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் அம்பிகாபதி ரி ரிலீஸில் க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனர் எதிர்ப்பு!

vinoth
வியாழன், 24 ஜூலை 2025 (09:43 IST)
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.  2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இந்த படம் தனுஷுக்கு இந்தியில் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, சோனம் கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது. தற்போது இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரி ரிலீஸ செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலமாக க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கு இயக்குனர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரோஸ் நிறுவனம் “கதையின் அடிப்படையை மாற்றாமல் ஏ ஐ மூலமாக சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம். உலகெங்கும் இதுபோன்ற புதுவிதமான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது” என விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரிக்க, சிந்திக்க, வியக்க வைத்தது…வடிவேலுவின் ‘மாரீசன்’ படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்!

தொழிலதிபர் ஆகும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா.. வாசனைத் திரவிய துறையில் முதலீடு!

நன்றி கார்ட் போட்டதற்கும் பணம் கேட்கிறார்… இளையராஜா மீது வனிதா ஆவேசம்!

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments