Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி பயோபிக்கில் நான் நடிக்கிறேனா? பாலிவுட் நடிகர் அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:13 IST)
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர். இந்நிலையில் இப்போது இவரின் பயோபிக் ரன்பீர் கபூர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சச்சின், தோனி, அசாருதீன் மற்றும் கபில்தேவ் ஆகியோரின் பயோபிக்குகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசிய ரன்பீர் கபூர் தான் கங்குலி பயோபிக்கில் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “கங்குலி உலகமே கொண்டாடும் ஒரு லெஜண்ட். கெடு வாய்ப்பாக நான் அவரின் பயோபிக்கில் நடிக்கவில்லை. எனக்குக் காதல்கதைகள்தான் செட் ஆகும். எனக்காக இயக்குனர்கள் அப்படிபட்ட கதைகளைதான் எழுதி வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments