Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அய்யப்பனும் கோஷியும் நடிகர் தேர்வு – மாஸ் ஹீரோவுடன் மோதும் வில்லன் நடிகர்!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (17:53 IST)
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் ராணா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என பவன் கல்யாண் விரும்பினார். ஆனால் அவரிடம் தேதிகள் இல்லாததால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் பாகுபலி புகழ் ராணா நடிக்க உள்ளாராம். படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சாய் பல்லவியும், ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments