Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரம்யா நம்பீஸன் குரலில் பாட்டி வடை சுட்ட கதை

ரம்யா நம்பீஸன் குரலில் பாட்டி வடை சுட்ட கதை
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (18:15 IST)
பாட்டி வடை சுட்ட கதையை கேட்காத தமிழ் குழந்தைகள்... யாருமே இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. கதை கேட்காமல் ஒரு புதிய தலைமுறை வெறும் டிவி மட்டுமே பார்த்து உருவாகி வருவது நம்முடைய தமிழகத்தில்தான். அவர்களுக்காக கதம் கதம் படத்தில் அவர்களுக்குப் பிடித்த தமிங்கிலீஷில் பாட்டி வடை சுட்ட கதையை பாடலாக்கியுள்ளனர்.
தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல், ஒரு பாட்டி வடைய சுட்டா அதை காக்கா தூக்கிப் போச்சு... என்று தொடங்குகிறது. நடுநடுவே ஆங்கில வார்த்தைகளையும் தூவி பாட்டி வடை சுட்ட கதையை நகர்ப்புறமாக்கியுள்ளனர்.
 
இந்தப் பாடலை யாரை வைத்து பாட வைக்கலாம் என்று மண்டையை உடைத்திருக்கிறார்கள். கடைசியில் அவர்கள் தேர்வு செய்தது ரம்யா நம்பீஸன். ஏற்கனவே பாண்டிய நாடு படத்தில் இவரது பை பை கலாசி பை பாடல் செம ஹிட். ஆனால் அந்த வயாக்ரா குரலில் குழந்தைப் பாடலை பாட முடியாதே. அதுக்கென்ன... நானே குழந்தையாக மாறி பாடுறேன் என்று குழந்தை குரலிலேயே முழுப் பாடலையும் ரம்யா நம்பீஸன் பாடியுள்ளார்.
 
விரைவில் ரம்யாவின் குழந்தைக்குரல் பாட்டி வடை சுட்ட பாடலை வீடியோவாக வெளியிட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil