Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியோவுடன் கைகோர்த்த நடிகை ரம்யா நம்பீசன் - போஸ்டருடன் புதுப்பட அப்டேட்!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (13:46 IST)
பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து புது படமொன்றை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ. 
 
அதேபோல் பிக்பாஸ் கவுனுடன் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா நம்பீசன் தற்போது தனது அடுத்த படத்தில் ரியோவுக்கு ஜோடியாகிறார். பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று இன்னும் ஏராளமானோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. வருகிற வியாழக்கிழமை முதல் சென்னையில் துவங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து  கேரளா, குஜராத், கொடைக்கானல் போன்ற இடத்திலும் நடக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments