Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ராம்லீலாவாக வெளிவரும் கோவிந்துடு அந்தரிவாடு

Webdunia
வியாழன், 26 பிப்ரவரி 2015 (16:31 IST)
தெலுங்கில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த படம், கோவிந்துடு அந்தரிவாடு படத்தை தமிழில் ராம்லீலா என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகின்றனர். 
கிருஷ்ணவம்சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.
 
அப்பா பிரகாஷ் ராஜூக்கும், மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறார். இந்த குடும்ப கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ண வம்சி உருவாக்கியுள்ளார்.
 
ராம்சரண்-காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த ‘மாவீரன்’ படம் தமிழில் வெற்றி பெற்றது. அதுபோல், இந்த படமும் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

துப்பறிவாளன் 2 ஷூட்டிங் லண்டனில் இல்லை… லொகேஷனை மாற்றிய விஷால்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சன் பிக்சர்ஸ்?

கோட் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ள வெங்கட்பிரபு!

தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவான ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments