Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியை இயக்குகிறாரா ராமராஜன்? பரபரப்பைக் கிளப்பிய தகவல்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:40 IST)
முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகரான ராமராஜன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் தற்போதைய ராமராஜன் என வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்றும் டைரக்‌ஷன் மட்டுமே செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ராமராஜன் ஏற்கனவே தான் நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். அவர் மறைந்த இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments