Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ராம், ப்ரியாமணியுடன் நடிக்கும் மிஷ்கின்

இயக்குனர் ராம், ப்ரியாமணியுடன் நடிக்கும் மிஷ்கின்
, திங்கள், 30 மார்ச் 2015 (13:24 IST)
கேட்கும் போதே மிரட்சியாக இருக்கிறது. வெட்டு குத்து கடத்தல் பேய் என்று இருட்டுலகில் தவழ்ந்து கொண்டிருக்கும் மிஷ்கின் காமெடி ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். ப்ளீஸ்... ஓடாதீங்க. இன்னும் சொல்லி முடிக்கலை.
 

 
மிஷ்கின் தனது ஸ்டைலில் நகைச்சுவை ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். அதனை படமாக்கப் போகிறவர் மிஷ்கினின் முன்னாள் அசிஸ்டெண்ட் ஜிஆர்.ஆதித்யா. இந்தப் படத்தில் நடிக்கிறவர், சாப்பிட்டியா என்ற அன்பான வார்த்தையையே, தொண்டை புடைக்க ஆவேசமாக கேட்கிற இயக்குனர், ராம். இவருக்கு ஜோடியாக ப்ரியாமணி.
 
ஆச்சரியங்கள் இன்னும் அடங்கவில்லை. படத்தில் வில்லனாக நடிப்பவர் மிஷ்கின். ஸ்கிரிப்டும் இவர் எனும் போது வில்லனாக இவருக்கு டபுள் ரோல் எனலாம்.
 
இந்த ரணகள காமெடிப் படம் ஜுன் 15 தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil