Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்கிரியைவிட டெம்பர் சூப்பர் - ஆட்டத்தை தொடங்கிய ராம் கோபால் வர்மா

போக்கிரியைவிட டெம்பர் சூப்பர் - ஆட்டத்தை தொடங்கிய ராம் கோபால் வர்மா
, சனி, 29 நவம்பர் 2014 (10:51 IST)
ட்விட்டரை மற்றவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ. ராம் கோபால் வர்மா தீக்குச்சியாகதான் அதனை நினைத்திருக்கிறார்.
 
தொட்டால் வெடிக்கும் பிரச்சனைகளில் கமெண்ட் என்ற பெயரில் இரண்டு வரி கொளுத்திப் போட்டு அவர்பாட்டுக்கு கம்மென்று இருப்பார். மற்றவர்கள் அடித்துக் கொள்வார்கள்.
 
பிள்ளையாரின் தலையை கொய்த சிவனின் செயல் அல்கொய்தாவைவிட கொடுமையானது என்று ட்வீட் செய்து பிரச்சனையில் மாட்டினார். பிறகு ஆசிரியை மாணவன் உறவைப் பற்றிய ஸ்ரீதேவி என்ற படம். 
 
இப்போது மகேஷ்பாபுவின் ரசிகர்களை போகிற போக்கில் சீண்டியுள்ளார். 
 
ஜுனியர் என்டிஆர் டெம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து விதவிதமான ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். இந்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் சில காட்சிகளை பார்த்ததாகவும், படம் வெளிவந்தால் ஜெகனை ஜெ 'கன்' என்று அழைப்பார்கள் என்றும், அவரது பிசினஸ்மேன், போக்கிரி எல்லாம் டெம்பருக்கு முன்னால் வெறும் ப்ளாப் படங்கள் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
 
பூரி ஜெகன்நாத்தின் காசு வாங்காத பிஆர்ஓவாக வர்மா செயல்படுவது இது முதல்முறையல்ல. மேலும், அவர் குறிப்பிட்டிருக்கும் பிசினஸ்மேன், போக்கிரி இரண்டுமே மகேஷ்பாபு நடித்த படங்கள்.
 
சந்தடிசாக்கில் நம்மை சாய்ச்சிட்டாரே மச்சான் என்று கலங்கிப் போயுள்ளனர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil