Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிலி கிளப்பும் வர்மாவின் கில்லிங் வீரப்பன்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (11:57 IST)
ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வெளியிடும் ஒருவரி செய்தி முதல், அவர் எடுக்கும் இரண்டரை மணி நேர படம் வரை அனைத்தும் சர்ச்சையை கச்சையாக கட்டியவை. சர்ச்சை இல்லாமல் ஒரு படம் எடுக்க வர்மாவால் முடியுமா என்பது இனி சந்தேகம்.


 
 
அவரது கில்லிங் வீரப்பன் திரைப்படம், சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்வையும், மரணத்தையும் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.
 
இந்தப் படத்தில், வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார், வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரியின் வேடத்தில் நடித்துள்ளார். இதிலிருந்தே, படம் எந்தத் தரப்புக்கு சார்பானதாக இருக்கும் என்பது வெளிப்படை. வீரப்பனை சுட்டுக் கொல்லவில்லை, விஷம் வைத்துதான் பிடித்தார்கள். பிறகுதான் சுட்டார்கள் என்று வீரப்பன் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. அதையெல்லாம் கணக்கில் எடுக்காமல், போலீஸ் தரப்பு கூறியதை மட்டும் வைத்து கில்லிங் வீரப்பனை வர்மா எடுத்துள்ளார்.
 
நிச்சயம் படம் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கானின் உடல்நிலை பற்றி வெளியான தகவல்!

“அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தினோம்…” இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

பிரபாஸுக்கு உதவி செய்யும் புஜ்ஜி ரோபாவாக கீர்த்தி சுரேஷ்… ஜாலி வீடியோ!

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது விஷாலின் ரத்னம் திரைப்படம்!

தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இந்த பாலிவுட் நடிகர்தானா? லேட்டஸ்ட் தகவல்!

Show comments