Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படம் என்பதால் நான் இந்தியன் 2 வில் நடிக்கவில்லை…ரகுல் ப்ரீத் சிங் சொன்ன காரணம்!

vinoth
ஞாயிறு, 9 ஜூன் 2024 (10:07 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை.

சமீபத்தில் அவர் நடித்த அயலான் திரைப்படம் ரிலீஸான நிலையில் அவர் கைவசம் இப்போது இந்தியன் 2 மட்டுமே உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்நிலையில் படம் பற்றியும் அதில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் பேசியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அதில் “நான் இது கமல் சார் படம், ஷங்கர் சார் இயக்குகிறார் என்பதால் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என்னுடைய கதாபாத்திரம் பிடித்தததால்தான் நடித்தேன். என் நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும்படியான கதாபாத்திரம் அமைந்ததால்தான் நடித்தேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தலைக்கணம் கொண்ட தைரியமான பெண் வேடம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments