மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்… லால் சலாம் படத்தின் முதல் லுக் போஸடர்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (07:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது.

இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஆனால் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திடீரென்று ஒரு நாள் சென்றிருந்தார். அதன் பின்னர் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளையும் பார்த்து இயக்குனரை பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் படத்தில் ரஜினி சம்மந்தப்பட்டக் காட்சிகளை மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயர் மொய்தீன் பாய் என்று அறிவிக்கப்பட்டு அவரின் தோற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாட்ஷா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷி கண்ணா கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

க்ரீத்தி ஷெட்டியின் அழகியப் புகைப்படத் தொகுப்பு!

ஏன் ‘பைசன்’தான் என் முதல் படம் என்று சொல்கிறேன்?… துருவ் விக்ரம் சொல்லும் காரணம்!

துல்கரைத் தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை!

அவதார் 3 உடன் மோதும் கார்த்தியின் ‘வா வாத்தியார்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments