Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்புராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்: ரஜினிகாந்த் வாழ்த்து..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (18:33 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்து ரஜினிகாந்த தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது
 
 ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகைவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது.  சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரோடி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். 
 
இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு எனது தனி பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு யானைகளும் நடித்திருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க இருக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார்.  கார்த்திக் சுப்புராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனது அன்பான வாழ்த்துக்கள்’ என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments