Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோரும் கோச்சடையானை திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Webdunia
சனி, 24 மே 2014 (10:42 IST)
கோச்சடையான் வெளியாகி திரையுலகினரின் அமோக பாராட்டுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளை அழைத்துச் செல்ல இந்த கோடையில் கோச்சடையான் சிறந்த தேர்வு என்பது பெரும்பாலானவர்களின் கருத்து.
கோச்சடையானின் வெற்றிவிழாவில் ரசிகர்களை சந்திப்பேன் என்று படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூறிய ரஜினி, படம் வெளியானதைத் தொடர்ந்து, எல்லோரும் திரையரங்கில் படத்தைப் பார்த்து என்ஜாய் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
 
நேற்று கோச்சடையான் வெளியானதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரு ட்வீட்கள் செய்தார் ரஜினி. முதல் ட்வீட்டில், என் மகள் சவுந்தர்யாவுக்கும், கோச்சடையான் குழுவுக்கும் வாழ்த்துகள்.. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று கூறியிருந்தார்.
 
இரண்டாவது ட்வீட்டில் கோச்சடையான் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
 
கோச்சடையான் படத்துக்காக ரஜினி அப்படத்தின் இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டியது போல இந்தப் படத்துக்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் ரஜினியை பாராட்டியுள்ளனர்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments