விஜய்யைப் பின்பற்றும் ரஜினி… தலைவர் 171 படத்தில் டி ஏஜிங் தொழில்நுட்பம்?

vinoth
திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் தனது GOAT படத்துக்காக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments