லால் சலாம் படத்தில் ரஜினிக்கு திருப்தி இல்லையா? பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்க காரணம் இதுவா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:41 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை முழுவதுமாக சமீபத்தில் ரஜினிகாந்த் பார்த்ததாகவும், ஆனால் அவருக்கு முழு திருப்தி இல்லை என்பதால் மீண்டும் காட்சிகளை படமாக்க வேண்டும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் படம் நினைத்தபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாததற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி - கமல் காம்போவை லோகேஷ் இயக்கவில்லை!? - ரஜினிகாந்த் அளித்த பதில்!

தன்பால் ஈர்ப்பாளர்களை கேவலமாக பேசிய பிக்பாஸ் போட்டியாளர்! வெடித்து சிதறிய மோகன்லால்!

10 நாள் தள்ளிதான் நமக்கு ‘தல’ தீபாவளி… அஜித்தின் அட்டகாசம் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

100 கோடி ரூபாய் வசூலைத் தொட திணறும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’!

மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 3’ போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments