வேட்டையன் படத்தின் அப்டேட்டைக் கொடுத்த அபிராமி…!

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (09:29 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வேட்டையன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்த வகையில் வேட்டையன் படத்தில் நடித்துள்ள அபிராமி தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments