Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பொன்னியின் செல்வனில் அந்த கதாபாத்திரம் கேட்டேன்… மணிரத்னம் மறுத்துவிட்டார்”… ரஜினி பேச்சு

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (09:12 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை நேற்று மாலை பிரம்மாண்டமாக வெளியாகின.இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் “நான் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் (வில்லன்) கதாபாத்திரத்தில் நடிக்கவா எனக் கேட்டேன். ஆனால் இயக்குனர் மணிரத்னம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.” என ஜாலியாக விழா மேடையில் பேசியுள்ளார்.

 தமிழ் புனைவுலகின் மூத்த எழுத்தாளரான கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெஹல்காம் தாக்குதலை மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்: தமிழ் நடிகை

ரி ரிலீஸில் மாஸ் காட்டியதா விஜய்யின் ‘சச்சின்’… வசூல் நிலவரம் என்ன?

“மோசமான நடிப்பு… அந்த படங்களைப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது” – சமந்தா ஓபன் டாக்!

எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments