Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா என்னுடைய இரண்டாவது தாய்... ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

vinoth
சனி, 27 ஜனவரி 2024 (11:20 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய லால் சலாம் படத்தின் இயக்குனரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி “என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள்.  அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர தைரியமாக யாருமே நடித்திருக்க முடியாது. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த படம் உங்களைப் பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி இல்லை” எனக் கூறியுள்ளார்.

பின்னர் தான் பேசும்போது ஐஸ்வர்யாவைக் குறிப்பிட்ட ரஜினிகாந்த் “கடவுள் கிட்ட ஆண் குழந்தை கேட்டால் நீ போ, நீ போ என அனுப்பி வைப்பார். ஆனால் பெண் குழந்தையைக் கேட்டால் நானே வருகிறேன் என வந்து பிறப்பார். அப்படிதான் எனக்கு என்னுடைய இரண்டு மகள்களும். என்னுடைய இரண்டாவது தாய் ஐஸ்வர்யா.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் படத்துடன் மோதும் ‘குட் பேட் அக்லி’.. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் எப்போது?

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்.. திடீர் ட்விஸ்ட்..!

ஒரு வாரத்திற்கு விமர்சனங்கள் வராமல் தடுக்க வேண்டும்: இயக்குனர் வசந்தபாலன்..!

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் .. இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர்

மாடர்ன் உடை ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் அட்டகாச ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments