Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த மாதம் தொடங்கும் ரஜினியின் புதிய படம்

அடுத்த மாதம் தொடங்கும் ரஜினியின் புதிய படம்
, வியாழன், 3 ஏப்ரல் 2014 (12:26 IST)
கோச்சடையான் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது.
தேர்தல் காரணமாக கோச்சடையானின் வெளியீட்டு தேதி இன்றும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அடுத்த மாதம் 20 ஆம் தேதி பூஜையுடன் தொடங்குகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடித்த உள்ளனர். சாருலதா படத்தை இயக்கிய பொன். குமரன் கதை, வசனத்தை எழுத கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
 
படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா இருவரிடமும் கால்ஷீட் கேட்க உள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
 
படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil