Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரிம் செய்யப்பட்டது லிங்கா - பத்து நிமிடங்கள் குறைப்பு

ட்ரிம் செய்யப்பட்டது லிங்கா - பத்து நிமிடங்கள் குறைப்பு
, புதன், 17 டிசம்பர் 2014 (09:40 IST)
லிங்கா படம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் ஓடுகிறது. படத்தின் முதல் பகுதியிலும், கிளைமாக்ஸிலும் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக இருப்பதை எடிட் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என விமர்சனங்கள் எழுதப்பட்டன. இது சர்ச்சையாகவும் ஆனது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராதாரவி, லீங்கா நீளாமாக இருக்குன்னு எழுதுறாங்க. எது நீளம். படமா இல்லை வேறு எதுவுமா என்றரீதியில் இரட்டை அர்த்தத்தில் விமர்சனம் செய்தவர்களை வசைபாடினார்.
 
இப்போது லிங்காவின் 10 நிமிடக் காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். இன்றுமுதல் ட்ரிம் செய்யப்பட்ட லிங்காவை ரசிகர்கள் திரையில் கண்டு மகிழலாம்.
 
ராதாரவியின் - எது நீளம் - என்ற சந்தேகம் இப்போது தீர்ந்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil