Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி லிங்கா எப்போது...?

இந்தி லிங்கா எப்போது...?
, புதன், 17 டிசம்பர் 2014 (09:32 IST)
லிங்கா தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்திப் பதிப்பு எப்போது வெளியாகும்?
லிங்கா வடஇந்தியாவில் முதல் மூன்று தினங்களில் ஒன்றரை கோடிகள் வசூலித்துள்ளது. இந்திப் பதிப்பு வெளியானால் இன்னும் பல கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போது இந்திப் பதிப்பு வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 
அமீர் கானின் பிகே, அனுராக் காஷ்யபின் அக்ளி போன்ற முக்கியமான படங்கள் இந்த மாதம் வெளியாகின்றன. பிகே வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அப்போது லிங்காவை வெளியிடுவது தற்கொலைக்கு சமானம். கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிடலாம் என்றால் டிசம்பர் 26 அக்ளி வெளியாகிறது.
 
நேரடி இந்திப் படங்கள் காரணமாக லிங்காவின் இந்திப் பதிப்பை எப்போது வெளியிடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil