Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (12:30 IST)
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் அவரது உடலுக்கு ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார். 
 
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில நாட்களாக நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்தாலும் நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்பதால் அறுவை சிகிச்சை தாமதமானது.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் சிகிச்சையின் பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு காலமானார். இதனை அடுத்து அவருடைய உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியுடன் நடிகை மீனா ’முத்து’ ’எஜமான்’ ’அண்ணாத்த’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments