பிரதமர், முதல்வர் இரண்டு பதவியேற்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு.. என்ன முடிவெடுப்பார்?

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (17:42 IST)
பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இந்த இரண்டு விழாவிற்கும் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் ஜூன் 9ஆம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் கூறுகின்றன. 
 
அதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு விழாவுக்கு ரஜினிகாந்த் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments