ரஜினியின் சூப்பர்ஹிட் திரைப்படம் மூன்று முகம் ரி ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (09:19 IST)
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் மூன்று முகம். இந்த படத்தில் அவருடன் செந்தாமரை, சத்யராஜ், ராதிகா, டெல்லி கணேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் சில்க் ஸ்மிதா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர். ஜெகன்னாதன் இயக்கி இருந்தார்.

1982 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி ரஜினியின் முக்கிய படங்களில் ஒன்றாக இன்றளவும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இப்போது 41 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தை மீண்டும் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சென்னையில் சில திரையரங்குகளில் மட்டும் இந்த படம் ரி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments