Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் தெலுங்கு படம் - மகேஷ் பாபுவுடன் நடிக்கிறார்

ரஜினியின் தெலுங்கு படம் - மகேஷ் பாபுவுடன் நடிக்கிறார்
, சனி, 27 செப்டம்பர் 2014 (14:06 IST)
தெலுங்குப் படம் ஒன்றில் மகேஷ் பாபுவுடன் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சூரியநாராயண பாபு தயாரிக்கிறார்.
 
லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ரஜினி சூரியநாராயண பாபுவை திடீரென சந்தித்தது ஆந்திர படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சந்திப்பு குறித்து பேசிய சூரியநாராயண பாபு, தான் தயாரிக்கும் தெலுங்குப் படத்தில் மகேஷ் பாபுவுடன் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். இவர் ரஜினியின் ஆரம்ப காலத்தில் ரஜினி நடித்த தெலுங்கு, இந்தி, தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார்.
 
ஈரோஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் இரு படங்கள் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அவை முடிந்த பிறகு சூரியநாராயண பாபு தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil