Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிப்புப் பட்டறையில் ஒத்திகை பார்த்த ரஜினி

நடிப்புப் பட்டறையில் ஒத்திகை பார்த்த ரஜினி
, சனி, 4 ஜூலை 2015 (10:02 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் நடிப்புப் பயிற்சிப் பட்டறை நடந்து வருகிறது. மெட்ராஸ் படத்தின் போதும், படப்பிடிப்புக்கு கிளம்பும்முன், நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களை நடித்துப் பார்க்கும் பயிற்சிப் பட்டறையை ரஞ்சித் நடத்தினார். 
இந்தப் பயிற்சிப் பட்டறை, நடிகர்கள் அதிக டேக்குகள் வாங்காமல் நடிக்கவும், கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகவும் துணை புரியும். அறிமுக நடிகர்கள்தான் இப்படிப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வார்கள். ஓரளவு அறிமுகம் உள்ள நடிகரை, பயிற்சி பட்டறைக்கு வாங்க என்று அழைப்பதே கௌரவ குறைவாக பார்க்கப்படும். 
 
ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் படத்தின் பயிற்சிப் பட்டறை தற்போது நடந்து வருகிறது. ஆனால், ரஜினிக்கு அழைப்பில்லை. இருந்தும் நேற்று முன்தினம் பட்டறை நடக்கும் இடத்துக்கு சென்றவர், தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தபோது, நானும் ஒத்திகை பார்க்கிறேன் என்று நடித்துப் பார்த்திருக்கிறார். 
 
ரஜினியே ஒத்திகை பார்க்கும் போதும், நாமும் ஒத்திகை பார்ப்பதில் தவறில்லை என பிற ஹீரோக்களும் இதுபோன்ற ஒத்திகைக்கு தங்களை உட்படுத்தினால், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil