Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் யாருடைய ஃபேன் தெரியுமா?

ரஜினிகாந்த் யாருடைய ஃபேன் தெரியுமா?
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (09:39 IST)
சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், சோனாக்ஷி சின்கா... என்று பாலிவுட்டின் ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. ரஜினியை தலைவர் என்று சொல்வது பாலிவுட் ஸ்டார்கள் மத்தியில் பெருமையாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினி யாருடைய ரசிகர்...?

அமிதாப்பச்சன் என்று சரியாக சொன்னவர்களுக்கு 100 மார்க். ஆனால் புதிதாக ஒருவருக்கு ரசிகராகியிருக்கிறார் ரஜினி. அவர் சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ் படங்களை இயக்கியிருக்கும் ரோஹித் ஷெட்டி.

சமீபத்தில் ஹைதராபாத் வந்த ரோஹித் லிங்கா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ரஜினியை பார்க்க வந்துள்ளார். ரோஹித் வந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதும் ரஜினியே தேடிச் சென்று அவரை வரவேற்றுள்ளார்.

ரோஹித்துக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது. அந்த அற்புத தருணத்தில் ரஜினி அவரிடம், நான் உங்க ஃபேன் என்று கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் இதேபோல் ஒரு சம்பவம் நடந்ததில்லை, ரஜினியை போல வருமா என்று கண் மெய் கலங்க கூறி வருகிறார் ரோஹித் ஷெட்டி.

சூப்பர் ஸ்டாரின் பாலிவுட் ரசிகர்கள் எண்ணிக்கையில் மேலும் ஒன்று அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil