Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் டான்ஸ் எப்படி? பேட்ட அப்டேட்

ரஜினியின் டான்ஸ் எப்படி? பேட்ட அப்டேட்
Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (17:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் பேட்ட. இந்த படத்தை ரஜினியின் ரசிகரும் இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். 
 
மேலும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதேபோல், இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் மரண மாஸ் மற்றும் உல்லால பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் உல்லால பாடலில் ரஜினியின் நடனம் எப்படி இருக்கும் என அந்த பாடலின் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,
கார்த்திக் சுப்புராஜ், இந்த பாட்டை சென்னையிலதான் எடுக்கணும், நைட் ஷூட்னு சொன்னார். இந்தப் பாட்டு ஏதோ மொட்டை மாடியிலதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, செட்டே பயங்கர பிரமாண்டமா போட்டிருந்தாங்க. 
 
ரொம்ப சமத்தாவும், சூப்பராவும் ஆடிட்டுப் போயிட்டார் ரஜினி. மானிட்டர்ல தலைவரோட ஆட்டத்தைப் பார்த்துட்டு மொத்த யூனிட்டுமே கை தட்டினாங்க. கண்டிப்பா ஆடியன்ஸும் பாட்டை ரசிப்பாங்க, ஆடுவாங்க. ரஜினி சார் மட்டுமல்ல, பெரிய பட்டாளமே இந்தப் பாட்டுல இருக்கும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments