Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி படத்தில் சர்ப்ரைஸாக இணைந்த பிரபல நடிகை… செம்ம குத்தாட்ட பாடலுக்கு நடனம்!

vinoth
புதன், 19 பிப்ரவரி 2025 (09:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில மாதங்கள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  தற்போது ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நடந்து வருகிறது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் இடம்பெறும் ஒரு துள்ளலிசை பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறகனவே ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய ‘காவாலா’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments