Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் உள்ள பச்சன்களை விசாரித்த ரஜினி!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:34 IST)
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாக தகவல்.  
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்று இரவு தகவல்கள் வெளிவந்தன. இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார். 
 
மேலும் அமிதாப்பை அடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பேத்தி ஆராதனா ஆகியோர்களின் கொரோனா முடிவு வெளியாகியுள்ளது. மூவருக்குமே நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் மிகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை சமந்தாவின் கார்ஜியஸ் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஊதாப்பூ நிற சேலையில் அழகுப் பதுமையாக கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்!

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & செல்லா அய்யாவு…. செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கட்டா குஸ்தி 2…!

ஆர்வம் காட்டாத தாணு… சிம்பு படத்தைத் தானே தயாரிக்கிறாரா வெற்றிமாறன்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ்… ஹீரோயின் இவர்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments