Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸ் தேதியை அறிவித்த ரஜினியின் வேட்டையன்… பின் வாங்குமா கங்குவா?

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (14:31 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று ரிலீஸ் தேதியை வேட்டையன் படக்குழு உறுதி செய்துள்ளது.

வேட்டையன் தள்ளிப் போகவுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில்தான் சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதைப் படத்தின் தயாரிப்பாளரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது வேட்டையன் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளதால் கங்குவா ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம் "ஆக்குவாய் காப்பாய்"

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments