Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் பாடல் வெளியீட்டில் ரஜினி ?

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:59 IST)
இன்று நடைபெற இருக்கும் சர்கார் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படமாக சர்கார் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் பேட்டை, காஞ்சனா 3 ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. ரஜினி முருகதாஸ் இணயும் அடுத்த படத்தையும் தயார்ப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் படத்தில், விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் சிம்டாங்காரன் சிங்கிள் ட்ராக் மற்றும் ஒருவிரல் புரட்சி பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.படத்தின் மீதமுள்ள பாடல்கள் வெளியீடு இன்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஓர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இன்று நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ரஜினி விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விழாவில் ரஜினி- ஏஆர் முருகதாஸ்- சன் பிக்ஸர்ஸ் இணையவிருக்கும் படம் பற்றிய அறிவிப்பு ஏதேனும் வரலாம் எனவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments