Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா இசையில் தனிக்காட்டு ராஜாவாகும் விக்ரம் பிரபு

இளையராஜா இசையில் தனிக்காட்டு ராஜாவாகும் விக்ரம் பிரபு
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (12:12 IST)
பழைய படங்களின் பெயர்களை - குறிப்பாக ரஜினி நடித்த பழைய படங்களின் பெயர்களை தங்களது படத்துக்கு வைக்க நடிகர்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு பாயும் புலி என பெயர் வைத்துள்ளனர். ரஜினியின் தனிக்காட்டு ராஜா படத்தலைப்பிலும் ஒரு படம் தயாராகிறது.
 

 
1982 -இல் ரஜினி நடிப்பில் வெளியான படம், தனிக்காட்டு ராஜா. இளையராஜா இசையமைத்திருந்தார். இதேபெயரில் தயாராகும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். படத்தை இயக்குவது மஞ்சப்பை படத்தை இயக்கிய நவீன் ராகவன். 
 
ரஜினி படத்துக்கு இசையமைத்த இளையராஜாவே இந்தப் படத்துக்கும் இசையமைப்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil