Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி லோகேஷ் படத்துக்கு நல்ல நாள் குறித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்!

vinoth
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (12:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜைக்கு ஏப்ரல் மாதத்தில் 12 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஒன்றை குறித்து வைத்துள்ளதாம் சன்பிக்சர்ஸ் நிறுவனம். அந்த மாதத்தில் இந்த இரண்டு நாட்களும் சுபமுகூர்த்த  தினங்கள் என்பதால் அந்த தேதிகளை குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் #Karthi29 பிரம்மாண்ட துவக்கம்!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்!

தனுஷின் 52வது படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கு! நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவா?

அடுத்த கட்டுரையில்
Show comments