Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் புதிய வில்லன் ஜெகபதிபாபு

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2014 (10:21 IST)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்கிறார்.
ஆந்திராவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெகபதிபாபு தமிழில் வில்லனாக தோன்றுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே விக்ரமின் தாண்டவம் படத்தில் வில்லனாக நடித்தார். தனது படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினியே அவரை தேர்வு செய்துள்ளார்.
 
இதனை தனது முகநூல் பக்கத்தில் ஜெகபதிபாபுவும் உறுதி செய்துள்ளார். 
 
இந்தப் படத்தில் ரஜினியுடன் சோனாக்ஷி சின்காவும் நடிக்க உள்ளார். இன்னொரு ஹீரோயின் அனுஷ்கா என்கிறார்கள். ரஹ்மான் இசையமைக்க ராக்லைன் வெங்கடேஷ் படத்தை தயாரிக்கிறார்.
 

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments