நயன்தாராவை சிபாரிசு செய்தாரா ரஜினி? லீக்கான தகவல்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (14:08 IST)
தர்பார் படத்தில் நயன் தாரா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். நேற்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
ரஜினிக்கு ஜோடியாக லேடிய சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இன்று பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இப்படத்தில் கீர்த்தி சுரேஷை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க இருந்தாராம். ஆனால் ரஜினிகாந்த் நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டாராம். இதனால் முருகதாஸ் வேறு வழி இல்லாமல் கீர்த்தி சுரேஷை நீக்கிவிட்டு நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்: தயார் நிலையில் 2 இயக்குனர்கள்.

மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

கமலுடன் இணையும் படத்திற்கு முன் இன்னொரு ரஜினி படம்.. சுந்தர் சி இயக்குனரா?

பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments