Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகா ரஜினியை காப்பாற்று

முருகா ரஜினியை காப்பாற்று
, வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (14:13 IST)
சிவகார்த்திகேயன் படம் என்றால் 35 கோடி பிசினஸ் கன்பார்ம்.
 
அப்படியிருந்தும் ரஜினி முருகன் வெளிவருவதில் பல்வேறு சிக்கல்கள். சமீபத்திய செய்தி, அறிவித்த செப்டம்பர் 17 -ஆம் தேதியும் ரஜினி முருகன் வெளிவருவது சந்தேகம்தானாம்.
 
செப்டம்பர் 17 விஜய்யின் புலி வெளிவருவதாகச் சொன்னதும் மற்றப் படங்கள் தெறித்து ஓடின. கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை, அதனால் புலி அக்.1 வெளியாகும் என ரிலீஸ் தேதியை மாற்றினர். உடனே, அந்த தேதியில் நான் நீ என படத்தை வெளியிட போட்டியிட்டனர்.
 
ரஜினி முருகனும் அதில் ஒன்று. ரஜினி முருகனுடன், த்ரிஷா இல்லன்னா நயன்தாராவையும் வெளியிடுவது என முடிவு செய்திருந்தனர்.
 
இப்போது ரஜினி முருகனும் செப்.17 வெளிவருவது சந்தேகம் என்ற நிலையில், விமல், அஞ்சலி நடித்திருக்கும் மாப்ள சிங்கம் படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
 
அந்த முருகன்தான் ரஜினி முருகனை காப்பாத்தணும்.

Share this Story:

Follow Webdunia tamil