Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுன் 15 திரைக்கு வரும் ரஜினி முருகன்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (14:16 IST)
சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் ஜுன் 15 திரைக்கு வருகிறது.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டானதும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் சிவ கார்த்திகேயனின் கால்ஷீட்டை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியது. அந்த கூட்டணி உருவாக்கிவரும் படம்தான், ரஜினி முருகன். 
 
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி வில்லன், ராஜ்கிரணுக்கு முக்கிய வேடம்.
 
படத்தின் ஒட்டு மொத்த உரிமையை வாங்கியிருக்கும் ஈராஸிடமிருந்து தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.
 
கிரிக்கெட் போட்டி மற்றும் பரீட்சைக்கு நடுவில் வெளியான காக்கி சட்டை, சுமார் படம் என்ற விமர்சனத்தைத் தாண்டி வசூலை அள்ளுகிறது. அதனால் ரஜினி முருகனை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். 
 
படத்தை ஜுன் 15 வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments