Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறாரா மாரி செல்வராஜ்?

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (10:55 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ளது.

இதையடுத்து ரஜினி, லோகேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கும் ரஜினி 171 படத்துக்கு பிறகு அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை மாஸ்டர் மற்றும் லியோ படங்களை தயாரித்த லலித் குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments