Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்கா ரிலீஸ் - ரசிகர்களை சந்திக்க தயாராகும் ரஜினி

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2014 (09:04 IST)
தனது படம் வெளியாகும் போது மட்டும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரஜினி. அந்த நேரங்களில் மட்டும், அரசியல் குறித்த கருத்துகள் அவரிடமிருந்து வெளியாகி ரசிகர்களை டெம்ப்ட் செய்யும். 
கோச்சடையான் ரிலீஸையொட்டி அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதேநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காக ட்விட்டரில் இணைவதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். ட்விட்டரிலும் இணைந்தார். அத்தோடு சரி. அதன் பிறகு அந்தப் பக்கத்தில் சின்ன கமெண்ட்கூட இதுவரை ரஜினி போடவில்லை.
 
டிசம்பர் 12 லிங்கா வெளியாகவிருப்பதால் ரசிகர்களை சந்திக்கலாமா என்று அவர் ஆலோசனை நடத்தி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அப்படியே சந்தித்தாலும், அரசியல் பற்றி கூறி அப்பாவி ரசிகர்களை ஆவேசப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments