Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இன்னும் இசையமைக்க ரஜினி தான் காரணம் - ஏஆர் ரஹ்மான்

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (16:09 IST)
ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகர். அவரால் தான்  நான் இன்னும் இசையமைத்து கொண்டிருக்கிறேன் என்று 2.0 டிரைலர் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 
 
இந்த விழாவில் ரஹ்மானிடம், இசையமைப்பாளர் அனிருத், “நீங்கள் இசையமைத்த படங்களில் நடித்த நடிகர்களில் யார் உங்களுக்கு பிடித்த நடிகர்?” என்ற கேள்வியை கேட்டார். 
 
அதற்கு பதிலளித்த ரஹ்மான், “ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகராக உள்ளார். ஏனென்றால் அவரின் ஆன்மிக பாதை, கடின உழைப்பின் மூலம் அவர் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக உள்ளார். நான் ஆஸ்கார் வாங்கிய பின் என்னுடைய 40 வயதில் இசையமைக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தேன். 
 
ஆனால் ரஜினிகாந்த் இந்த வயதில் கடுமையாக உழைப்பதைப் பார்த்து வியந்தேன். அவரின் கடின உழைப்பு எனக்கு உந்துகோளாக இருந்தது. அதனால் தான் இன்றும் நான் இசையமைத்து வருகின்றேன்” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments