Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின்166-ன் தரமான அப்டேட்! சூடுபிடிக்கும் சூப்பர் ஸ்டாரின் படம்!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (12:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின்166 படத்தின் தரமான அப்டேட் வெளிவந்து ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது 


 
விரல்விட்டு எண்ணக்கூடிய தரமான படங்களை தொடர்ச்சியாக கொடுக்கும் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவரான  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 166 படத்தில் இணைந்துள்ளார். 
 
பேட்ட படத்தின் வெறிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 166 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கப்போகிறார் ராக்ஸ்டார் அனிருத்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் காமெடி கிங் யோகிபாபு நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் , பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளாராம். இதுபற்றி படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறன்றனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 


 
அரசியல் அராஜகங்களை திரையிட்டு காட்டும் ஏ. ஆர்.முருகதாஸ்,  ரஜினியை வைத்து இயக்கும்  இப்படமும் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதால் நிச்சயம் ரஜினியின்  திரைப்பயணத்திலும் சரி... அரசியல் என்ட்ரிக்கும் சரி  இப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்றே கூறலாம்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments