மதுரையில் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி ரசிகர்கள் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.
நடிகர் ரஜினி நடித்து, ரஞ்சித் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கபாலி படம் வெளிவரும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில் கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனையையும் படைத்தது. விரைவில் கபாலி படம் வெளியாகவுள்ளதை அடுத்து மதுரையில் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் ரஜினி விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.
பெரியார் நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் விதவிதமான விளம்பரங்களை வரைந்துள்ளது. 90 களில் நடித்த ரஜினி முதல் தற்போதைய ரஜினியின் தோற்றம் வரை பல வண்ணங்களில் சுவர் விளம்பரம் வரையப்பட்டு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.