சென்னை திரையரங்கில் 'பேட்ட' பேனர் கிழிப்பு: ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (08:22 IST)
இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே கருத்துமோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் உள்ள ஆறு திரையரங்குகளிலும் அதிகாலை 4 மணி காட்சியாக 'பேட்ட' திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'விஸ்வாசம்' படமும் 4 மணி காட்சியாக திரையிடப்பட வேண்டும் என்று கூறினர்.

ஆனால் இதற்கு திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரின் முன் வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனர்களை கிழித்தனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்களை தடுக்க முயன்றதாகவும், இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் இருதரப்பினர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அதிகாலை 1.30 மணிக்காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments